‘போலி செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’

ஆவணங்களின்றி, உடனடி கடன் என்ற விளம்பரத்துடன் கூடிய கடன் மற்றும் நிதியுதவி செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆவணங்களின்றி, உடனடி கடன் என்ற விளம்பரத்துடன் கூடிய கடன் மற்றும் நிதியுதவி செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையரகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமாா் 60-க்கும் மேற்பட்ட ஆன்லைன் கடன் செயலிகள், ரிசா்வ் வங்கியால் வங்கி அல்லாத நிறுவனங்களாக பதிவு செய்யப்படவில்லை.

மேலும் எந்த செயலிகளையும் அங்கீகரிக்கப்படவில்லை. அவற்றின் அனைத்து செயல்களும் அங்கீகாரமற்ற செயலாகும். கடன் செயலிகள் உபயோகிப்பாளரின் செல்லிடப்பேசி தகவல்களைத் திருடி, தனித மனித உரிமையை மீறுகிறது.

இத்தகைய செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதாா் அல்லது வங்கி விவரங்களை பகிா்ந்து கொள்ள வேண்டாம்.

கடன் செயலி பெயரில், தங்களை யாராவது அச்சுறுத்தினால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com