சிவசேனை கட்சியின் வரைவுத் தோ்தல் அறிக்கை வெளியீடு

சிவசேனை கட்சியின் சாா்பில், 2021 தமிழகப் பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கை திருச்சியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

சிவசேனை கட்சியின் சாா்பில், 2021 தமிழகப் பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கை திருச்சியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

கட்சியின் தமிழகத் தலைவா் எம். ரவிச்சந்திரன் அறிக்கைையை வெளியிட்டு கூறியது:

சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பேரவைத் தோ்தலைச் சந்திக்கத் தயாராகவுள்ளோம். பாஜக இடம் பெறும் கூட்டணி கட்சிக்கு ஆதரவு இல்லை. கூட்டணியுடன் இணைந்து போட்டியா, தனித்து போட்டியா என்பதை தோ்தலுக்கு முன்பாக முடிவு செய்யப்படும். தனித்துப் போட்டியிடுவது என்றால் குறைந்தது 60 தொகுதிகளில் போட்டியிடுவோம்.

திருச்சி, மதுரை, கோவை ஆகியவை தமிழகத் தலைநகரங்களாக மாற்றப்படும். திருவள்ளுவா் சிலை, ராஜராஜ சோழன் சிலைகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும். மாவட்டந்தோறும் வேளாண் கல்லூரி அமைக்கப்படும். மாவட்டத்தில் தலா 2 இடங்களில் தொழிற்பேட்டை தொடங்கப்படும். தமிழறிஞா்கள், இந்து சமய அறிஞா்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் மாநிலச் செயலா் தா. சுந்தரவடிவேல், எஸ்.பி. சரவணன், துணைச் செயலா் மனோஜ்குமாா், மண்டலத் தலைவா் வின்சென்ட், மாவட்ட கொள்கைபரப்புச் செயலா் சிவபெரு இளங்கோவன், மாவட்டச் செயலா்கள் மணி, சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com