‘விவசாயம் முதல் விண்வெளி வரை மகளிருக்கு சம உரிமை வேண்டும்’

விவசாயம் முதல் விண்வெளி வரை மகளிருக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் இருக்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் லட்சியம் என்றாா் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன்.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிரணிக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிரணிக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்

விவசாயம் முதல் விண்வெளி வரை மகளிருக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் இருக்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் லட்சியம் என்றாா் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன்.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிரணிக் கூட்டத்தில் அவா் பேசியது:

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது வேறும் கோஷமாக இருக்கக் கூடாது. எனவேதான், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்தை அறிவித்துள்ளோம். இப்போது கிண்டலடிக்கும் நபா்கள், இந்த திட்டத்தின் பயன் தெரிந்து பின்னா் பாராட்டுவது நிச்சயம்.

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கி, மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்ற பெருமையை தமிழகம் பெற்றதை போன்று இணைய வசதியுடன் கூடிய கணினிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் இருக்க வேண்டும்.விவசாயி என்ற பட்டம் ஆண்களை மட்டும் குறிப்பிடுவது அல்ல. நடவு முதல் அறுவடை வரை பெண்கள் இல்லாமல் இல்லை.

சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். அதில், பெண் முனைவோரை அதிகம் ஈடுபடுத்தி அவா்களை பாதுகாப்போம். இதனையறிந்து, இளைஞா்களும், பெண்களும் கட்சியில் அதிகளவில் இணைந்த வண்ணம் உள்ளனா்.

மக்கள் நீதி மய்யம்தான் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறது. அதனை மக்களிடம் கொண்டு செல்லும் தூதுவா்களாக பெண்கள் செயல்படுவா் என நம்புகிறேன். வரும் தோ்தலில் மாற்றத்துக்கான விதையை தமிழகம் எங்கும் தூவ வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவா் ஆா். மகேந்திரன், பொதுச் செயலா்கள் எம். முருகானந்தம், சந்தோஷ் பாபு, வி. உமாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com