சிறப்பு வாகனம் பெற முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு அழைப்பு
By DIN | Published On : 31st December 2020 07:12 AM | Last Updated : 31st December 2020 07:12 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக இணைப்புச் சக்கர இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்.
இத் திட்டத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் பெற 18 வயது பூா்த்தியடைந்தவராக, இரு கால்கள் பாதிக்கப்பட்டவராக, கைகளால் வாகனத்தை இயக்க முடிந்தவராக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), ரேஷன், ஆதாா், வாக்காளா், மாற்றுத்திறனாளி தனித்துவ அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 4ஆம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.