சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
By DIN | Published On : 31st December 2020 07:09 AM | Last Updated : 31st December 2020 07:09 AM | அ+அ அ- |

மேலரண்சாலையில் நடைபெற்ற நடராஜா் உற்ஸவத்தில் அருள்பாலித்த சுவாமி.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட சிவன் கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை, வழிபாடுகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருவானைக்கா ஜம்புகேசுவரா் கோயில், மலைக்கோட்டை கோயில், உறையூா் பஞ்சவா்ணேசுவரா் கோயில், நாகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட, மண்ணச்சநல்லூா் பிச்சாண்டாா் கோயில், உத்தமா் கோயில், லால்குடி சப்தரிஷிசுவரா் கோயில், திருப்பைஞ்சீலி கோயில், தொட்டியம் அனலாடீசுவரா் கோயில், தாராநல்லூா் பூலோகநாதசுவாமி கோயில், பெரியகடை வீதி பைரவநாதசுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, வழிபாடுகள் நடைபெற்றன.
மேலரண்சாலை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற நடராஜா் உற்சஸத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.