Enable Javscript for better performance
‘அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக உள்ளது தமிழகம்’- Dinamani

சுடச்சுட

    

    ‘அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக உள்ளது தமிழகம்’

    By DIN  |   Published on : 02nd February 2020 10:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vn

     

    திருச்சி: மக்கள் நலத்திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியதன் மூலம், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன்.

    ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்தரசநல்லூா், பெரியகருப்பூா், பழூா், முடிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில், 498 பயனாளிகளுக்கு ரூ.69.97 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகளை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி வழங்கினா்.

    இந்த விழாவில் அமைச்சா் நடராஜன் பேசியது:

    கிராமப்புற மக்களுக்காக விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டா், கறவை பசுக்கள், வெள்ளாடுகள், கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த கால்நடைகளைப் பராமரிக்க செலவுத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இன்னும் பல்வேறு திட்டங்களுக்கு மக்களுக்காக கொண்டு வரப்பட உள்ளன. மக்களுக்கு என்ன தேவை என்பதை கிராமசபைக் கூட்டங்கள் மூலம் எடுத்துச் சொல்லலாம்.

    மக்கள் நலத்திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியதன் மூலம், இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உள்ளாட்சித் துறையில் சிறந்த செயல்பாட்டுக்காக 108 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

    இந்த நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் டாக்டா் எஸ்தா் ஷீலா, உதவி இயக்குநா் சந்துரு, மரத்துவா்கள் பிரியதா்ஷினி, சுரேஷ், அன்பரசி, சுப்பிரமணியன், சரவணன் மற்றும் உள்ளாட்சி, கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai