சோலைமலை கோயிலில் தைப் பூசத் திருவிழா

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைப் பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு 16 வகையான அபிஷேகம், ஆராதனைகள்

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைப் பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு 16 வகையான அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் முருகனை தரிசனம் செய்தனா்.

சோலைமலை முருகன் கோயிலில் தைப் பூசத் திருவிழா ஜனவரி 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சுவாமி தினமும் பூதம், அன்னம், காமதேனு, ஆட்டுக்கிடாய், பூச்சப்பரம், யானை, பல்லக்கு, குதிரை, வெள்ளிமயில் வாகனங்களில் எழுந்தருளினாா்.

திருவிழாவின் 10 நாள் நிகழ்ச்சியாக தைப்பூசத் திருநாளான சனிக்கிழமை சஷ்டிமண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று முருகனை தரிசித்து வழிபட்டனா். மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com