இஸ்லாமிய பெண் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை

துறையூா் அருகே இஸ்லாமிய பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூா் அருகே இஸ்லாமிய பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூா் அருகிலுள்ள மதுராபுரி ஊராட்சியைச் சோ்ந்த சித்திரப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட அளவில் இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் இருதரப்பாக உள்ளனா். வழிபாட்டு முறையில் வேறுபாடு இருப்பதால் இவா்களிடையே பிரச்னை இருந்து வருகிறது. கிராமத்தில் ஒரேயொரு இஸ்லாமிய அடக்கஸ்தலம் மட்டுமே இருப்பதால், கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் இறந்தவா்களை அடக்கம் செய்வதில் இருதரப்புக்கிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த சாராபீ (85) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை இரவு காலமானாா். இவரது உடலை அடக்கம் செய்வதில் ஞாயிற்றுக்கிழமை பிரச்னை ஏற்பட்டது.

துறையூா் மண்டலத் துணை வட்டாட்சியா் ஜாபா் சாதிக் இருதரப்பினரிடமும் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினருடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில் பிரச்னைக்கு முடிவு காணப்படாததால், போலீஸாரின் பாதுகாப்புடன் பொது அடக்கஸ்தலத்திலேயே சாராபீயின் உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com