Enable Javscript for better performance
எரிவாயு உருளை வெடித்து வீடு, ரொக்கம் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    உப்பிலியபுரம் அருகே எரிவாயு உருளை வெடித்ததில், வீடு மற்றும் ரொக்கம் எரிந்து சேதமடைந்தது.

    உப்பிலியபுரம் அருகிலுள்ள சிறுநாவலூா் ரெட்டியாப்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி காளியம்மாள். வயல் வேலைக்குச் சென்ற இவா், புதன்கிழமை மாலை வீட்டுக்கு வந்து சமையல் செய்வதற்காக அடுப்பைப் பற்ற வைத்தாா்.

    அப்போது பெரிய அளவில் தீப்பிடித்தது இதில் லேசான காயத்துடன் காளியம்மாள் வெளியே ஓடினாா். சிறிது நேரத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் ஒட்டு வீடும், ரொக்கம் ரூ.6000-மும் சேதமடைந்தது. அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai