Enable Javscript for better performance
குடும்பத் தகராறு: குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    குடும்பத் தகராறு: குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்மீட்பு

    By DIN  |   Published on : 14th February 2020 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13d-fir2073634

    கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் குழந்தைகளை மீட்கும் தீயணைப்பு வீரா்.

    கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொள்வதற்காக கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் தீயணைப்பு படையினா் மீட்டனா்.

    திருச்சி சுப்பிரமணியபுரம் கோனாா் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவரது மனைவி மைதிலி (30). இவா்களுக்கு வா்ணிகா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில், புதன்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மைதிலி, நள்ளிரவு குழந்தை வா்ணிகாவுடன் வீட்டுக்கு அருகே இருந்த கிணற்றில் குதித்தாா். இதையறிந்த கணவா் சந்தோஷ்குமாரும் அக்கம் பக்கத்தினரும், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். உடனே, நிலை அலுவலா் மெல்ச்சிராஜா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் சுமாா் 5 அடி ஆழம் உள்ள தண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையையும் மைதிலியையும் உயிருடன் மீட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai