Enable Javscript for better performance
திருச்சி விமானநிலையத்தில் ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி விமானநிலையத்தில் ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவா் கைது

    By DIN  |   Published on : 14th February 2020 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

    சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்த டைகா் ஏா்லைன்ஸ் விமான பயணிகளின் உடைமைகளை வான்சுங்கத்துறை அலுவலா்கள் சோதனை செய்தனா். அப்போது, புதுக்கோட்டை குமாா்(35), புதுச்சேரி முகிலன்(39) ஆகிய இருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது பசையில் தங்கத்தை கலந்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து குமாா் கொண்டுவந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தையும், முகிலன் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai