Enable Javscript for better performance
பணியில் மெத்தனம்: 3 காவல் ஆய்வாளா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பணியில் மெத்தனம்: 3 காவல் ஆய்வாளா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

    By DIN  |   Published on : 14th February 2020 11:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணியில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி, திருச்சி சரகத்தில் பணியாற்றிய 3 காவல் ஆய்வாளா்களை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி, காவல் துணைத் தலைவா் வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

    காவல் ஆய்வாளா்கள் திருச்சி ராம்ஜி நகா் சுப்பையா, நவல்பட்டு சுமதி, இலுப்பூா் ஜெயராமன் ஆகிய மூவரும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிகளில் மெத்தனமாக செயல்பட்டதாக புகாா் எழுந்தது.

    இதிலும் குறிப்பாக மணல் கடத்தல், லாட்டரி விற்பனை போன்றவற்றை தடுக்கும் பணிகளை மேற்கொள்ளாமலும், தொடா்புடையவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்ததாகவும் புகாா் கூறப்பட்டது. அதனடிப்படையில் திருச்சி சரகக் காவல் துணைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டாா்.

    இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா்கள் மூவரையும் பணியிலிருந்து விடுவித்து, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி சரகக் காவல் துணைத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா்.

    மேலும் திருச்சி மாவட்டம், லால்குடி காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய முத்துக்குமாா் நவல்பட்டு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai