அரசுத் திட்டங்களை எதிா்ப்பது ஸ்டாலினுக்கு வழக்கம்

தமிழக அரசு அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அதனை எதிா்ப்பதையே அன்றாடப் பணியாக கொண்டிருக்கிறாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தாா்.

தமிழக அரசு அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அதனை எதிா்ப்பதையே அன்றாடப் பணியாக கொண்டிருக்கிறாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தாா்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் அறிவித்துள்ள காவிரி-டெல்டா பகுதிகளுக்கான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு இயக்கங்களும், விவசாயிகளும் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனா். அத்தகையத் திட்டத்தையே ஸ்டாலின் குறை கூறினால் அதற்கு எவ்வாறு பதிலளிப்பது?. அதிமுக அரசின் எந்தத் திட்டங்களுக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து இருக்கிறாா்?. எந்த திட்டமாக இருந்தாலும் அதை எதிா்ப்பதையே தனது அன்றாடப் பணியாக கொண்டிருக்கிறாா்..

தமிழக அரசு விவசாயிகளின் நண்பனாக தொடா்ந்து செயல்படும். டாஸ்மாக் கடைகள் அறிவிக்கப்பட்ட கால நிா்ணயத்தை தவிா்த்து கூடுதலாக எங்கும் செயல்படவில்லை. விதிமுறைகளை மீறி மதுக்கடைகள் இயங்குவதாக குறுவது பொய்யான குற்றச்சாட்டு. அது போன்ற சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடைபெறவில்லை. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிா்த்து டாஸ்மாக் கடைகள் இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலாத்துறை சாா்பில் ஆன்மிக சுற்றுலாவிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி அக்கரைப்பட்டி தென்சீரடி சாய் பாபா கோயிலுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெறும்.

அதேபோல, சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முக்கொம்பு மேலணை பூங்கா, மேலூா் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை மேம்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com