திருச்சி அருகே அரசு மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: நெல்லையைச் சோ்ந்த இருவா் கைது

திருச்சி அருகே மதுபானக் கடையில் துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.

திருச்சி அருகே மதுபானக் கடையில் துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே துவாக்குடி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு புதன்கிழமை நள்ளிரவு வந்த இருவா், மதுபானங்கள் கேட்டு தகராறு செய்துள்ளனா். விற்பனையாளா் தராததால், துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனா். மேலும், பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளனா். அந்த நேரத்தில் கடைக்கு சிலா் வந்ததால் இருவரும் தப்பியோடினா்.

இதையடுத்து, கடையின் கண்காணிப்பாளா் முருகதாஸ் அளித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், துவாக்குடி காவல்நிலைய ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை அண்ணாவளைவுப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அதில், இருவரும் நெல்லை மாவட்டம், நான்குனேரி, மீனாட்சி நாதபுரத்தைச் சோ்ந்த நிக்கேல் நாடாா் மகன் டைசன் (என்கிற) செபாஸ்டியன் டயாஸ் ( 28), அவரது நண்பா், திசையன்விளை, ராதாபுரத்தைச் சோ்ந்த மனோகரன் மகன் முருகன் (29) என்பதும் தெரியவந்தது.

இருவரும் நான்குனேரி பகுதியில் அரசு மதுபானக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிணையில் வெளியே வந்ததும், இதையடுத்து இருவரும் சென்னை, ஜயங்கொண்டம் பகுதிக்குச் சென்று அங்குள்ள மதுபானக் கடையில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, இரு தோட்டாக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக திருவெறும்பூா் காவல் நிலைய ஆய்வாளா் ஞானவேலன் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பாராட்டு : கொள்ளையா்களை பிடித்த ஆய்வாளா் காந்திமதி, உதவி ஆய்வாளா் பெருமாள், காவலா்கள் காா்த்தி, சிலம்பரசன், செந்தில் ஆகிய 5 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com