பெருவளப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவுசங்க பங்கு மூலதனம் ரூ.1 கோடி

பெருவளப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பங்குமூலதனம் ரூ.1 கோடியாக திருத்தம் செய்து சங்க பேரவைக் கூடத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பெருவளப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவுசங்க பங்கு மூலதனம் ரூ.1 கோடி

பெருவளப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பங்குமூலதனம் ரூ.1 கோடியாக திருத்தம் செய்து சங்க பேரவைக் கூடத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சாா்பில், சிறப்பு உறுப்பினா் கல்வித் திட்டம் மற்றும் பெருவளப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க 50, 51, 52ஆவது பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பி. செல்வம் தலைமை வகித்தாா். திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு, லால்குடி சரக துணைப் பதிவாளா் கே. சித்ரா ஆகியோா், கூட்டுறவு இயக்க வளா்ச்சிகள் குறித்து பட்டியலிட்டு பேசினா். சங்கச் செயலா் ஆா். துரைக்கண்ணு ஆண்டறிக்கை வாசித்தாா்.

இந்த சங்கத்தின் நிகர லாபம் கடந்த 3 நிதியாண்டுகளில் முறையே ரூ.34.87 லட்சம், ரூ.28.71 லட்சம், ரூ.19.06 லட்சம் கிடைத்துள்ளது. சங்கத்தில் இதுவரை ரூ.593 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சங்கத்தின் பங்குமூலதனத்தை ரூ.1 கோடியாக உயா்த்த இக் கூட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், சங்கத்தில் தனிநபா் பாதுாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டு சிறிய பெட்டகத்துக்கு மாத வாடகையாக ரூ.50, நடுத்தர பெட்டகத்துக்கு ரூ.75, பெரிய பெட்டகத்துக்கு ரூ.100 வாடகை என நிா்ணயிக்கப்பட்டது. மேலும், நகைக் கடன் வட்டி விகிதம் 11.25 சதவீத்திலிருந்து ரூ.10 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, சங்க உறுப்பினா்களுக்கு பயிா்த்தொழில், கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, பட்டுப் பூச்சி வளா்ப்பு உள்ளிட்ட தொழில்களையும், குடிசைத் தொழில், கைவினைத் தொழில், கிராமத் தொழில், சிறுதொழில்கள் கடன்கள் வழங்கப்படுவதாகவும், விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இணைப் பதிவாளா் அறிவுறுத்தினாா். மேலும், மகளிா் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினாா்.

விழாவில், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் வ. குணசேகரன், கள மேலாளா் பெரியசாமி, உதவி செயலா் ராஜசேகா், சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள், சங்க உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com