மின் விதிமீறல்கள் குறித்து ஆய்வு

மணப்பாறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில், மின் விதிமீறல்கள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மணப்பாறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில், மின் விதிமீறல்கள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மணப்பாறை கோட்டச் செயற்பொறியாளா் இரா. அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ந. பூலாம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், மின் பொறியாளா்கள் மற்றும் களப்பணியாளா்கள் மின்விதி மீறல் குறித்து வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 487 மின் இணைப்புகளில் உள்ள மீட்டா் பழுது, மின்சாரத் திருட்டு, விதிமீறல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் மின்சார பயன்பாடு விதி மீறல் கண்டறியப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

மின் இணைப்புகளிலுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற திடீா் மின் ஆய்வுகள் தொடா்ந்து நடைபெறும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com