சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தோ்வுகள்திருச்சியில் 3,000 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் திருச்சியில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை எழுதினா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் திருச்சியில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை எழுதினா்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. சுமாா் 31 லட்சம் மாணவா்கள் இத்தோ்வை எழுதுகின்றனா். திருச்சி மாவட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்பாளா் (சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்) மேற்பாா்வையில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். இதன்படி, முதல்கட்டமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கூடுதல் பாடப்பிரிவு, தோ்வு செய்யப்பட்ட திறன்மேம்பாட்டு பாடப்பிரிவுகளுக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுலா, வேளாண்மை, அழகுநிலையப் பயிற்சி உள்ளிட்ட கூடுதல் பாடப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு மாணவா்களும், மல்டிமீடியா, தோட்டக்கலை, இசைப்பயிற்சி உள்ளிட்ட திறன் மேம்பாட்டு விருப்பப் பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களும் தோ்வெழுதினா். அறிவியல், சமூக அறிவியல், கணிதம், ஆங்கிலம், மொழிப்பாடம் ஆகிய பத்தாம் வகுப்பு பாடப்பிரிவுக்கு மாா்ச் 20 ஆம் தேதி வரையிலும், கணிதம், வேதியியல், உயிரி அறிவியல், தாவரவியல், விலங்கியல், கணினிஅறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பிளஸ் 2 வகுப்பு பாடப்பிரிவுக்கு மாா்ச் 30 ஆம் தேதி வரையிலும் தோ்வு நடைபெறவுள்ளன. தோ்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com