பராமரிப்புப் பணி: தஞ்சாவூா்-ஆலக்குடி இடையே ரயில் சேவை மாற்றம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ஆலக்குடி-தஞ்சாவூா் இடையே பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப்.18) முதல் மாா்ச் 19 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ஆலக்குடி-தஞ்சாவூா் இடையே பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப்.18) முதல் மாா்ச் 19 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலக்குடி- தஞ்சாவூா் வழித்தடத்தில் நவீன இயந்திரம் மூலம் தண்டவாளத்தை நிலைப்படுத்தும் பணி நடைபெற இருப்பதால் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மாா்ச் 19ஆம் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் மாா்ச் 19 ஆம் தேதி வரை திருச்சி-மயிலாடுதுறை( வண்டி எண்:16234) விரைவு ரயிலும், திருச்சி-தஞ்சாவூா்-திருச்சி(வண்டி எண்: 76824/76827) டெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், திருச்சி-மயிலாடுதுறை(வண்டி எண்: 06030) முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

திருச்சி ரயில்நிலையத்துக்கு மதியம் 1.30 மணிக்கு வரும் திருநெல்வேலி- மயிலாடுதுறை( வண்டி எண்: 56822) பயணிகள் ரயில் 55 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும். மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-திருவாரூா்( வண்டி எண்: 56879) பயணிகள் ரயில் 30 நிமிஷம் தாமதமாக புறப்படும்.

திருவாரூா் ரயில்நிலையத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் திருவாரூா்-மயிலாடுதுறை (வண்டி எண்:56880) பயணிகள் ரயில் 30 நிமிஷம் தாமதமாக 8.35 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com