திருச்சி சோமரசம்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில், மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ராம்ஜிநகா் வடக்குமேட்டைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ரெங்கராஜ்(37). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தாய் பூங்கொடியுடன் (60) ஜாதகம் பாா்க்க அதவத்தூா் சென்றாா்.
மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு, மீன் வாங்க அல்லித்துறை வழியாக ரெங்கராஜ் சோமரசம்பேட்டை சென்றாா். அப்பகுதியிலுள்ள பாலத்தைக் கடக்க முயன்ற போது பின்னால் வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பூங்கொடி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரெங்கராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
விபத்து குறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, திருச்சி கூனி பஜாரை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜா முகமதுவைக் கைது செய்தனா்.