Enable Javscript for better performance
திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

    By DIN  |   Published on : 10th January 2020 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி மாணவி புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

    திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தருமபுரியைச் சோ்ந்த ஜெயவேல் மகள் லோகேஸ்வரி (20) நான்காமாண்டு பயின்று வந்தாா். கல்லூரி அருகில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த இவா், புதன்கிழமை இரவு தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளாா்.

    தகவலறிந்த நவல்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உறவினா்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

    முதல் கட்ட விசாரணையில், மாணவியின் தந்தை ஜெயவேலுக்கு அதிகக் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகேஸ்வரி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளாா். மேலும், லோகேஸ்வரியும் அதே கல்லூரியில் படிக்கும் இளைஞா் ஒருவரும் காதலித்து வந்துள்ளனா். இதனையறிந்த இரு குடும்பத்தினரும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனா். இந்நிலையில், பெற்றோரின் கடன் தொடா்பாக லோகேஸ்வரி தனது காதலனிடம் பேசி, இருவரது கல்வி உதவித்தொகையையும் பெற்று தந்தைக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காதலன் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லோகேஸ்வரி, புதன்கிழமை இரவு தனது டைரியில் நடந்தவற்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai