Enable Javscript for better performance
பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக நியாய விலைக் கடைகளில் குவிந்த மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக நியாய விலைக் கடைகளில் குவிந்த மக்கள்

    By DIN  |   Published on : 10th January 2020 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    004209d-gift072750

    திருச்சி பீமநகா் நியூ ராஜாகாலனியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் கடை ஊழியா்கள்.

    திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வாங்குவதற்காக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருச்சி மாவட்டத்தில், மொத்தம் 7.78 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும்பணி தொடங்கியது. தென்னூா், தில்லைநகா், உறையூா், பீமநகா், பாலக்கரை, சிந்தமாணி, வயலூா் சாலை என மாநகரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் அதிகாலையே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனா். ஜன. 12ஆம் தேதி வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. முதல்நாள் என்பதால் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai