Enable Javscript for better performance
மணப்பாறை, மருங்காபுரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    மணப்பாறை, மருங்காபுரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

    By DIN  |   Published on : 10th January 2020 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    மணப்பாறையில் 119 நியாயவிலைக் கடைகளில் உள்ள 68,250 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கமாக தலா ரூ.1,000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

    பரிசுத் தொகுப்பு வழங்குவதை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் தொடக்கி வைத்தாா்.

    அதேபோல், மருங்காபுரி வட்டத்தில் உள்ள 73 நியாயவிலை கடைகளில் 36,046 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் விநியோகம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai