குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

மணல் கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணல் கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் ரெங்கசாமி மகன் துரைராஜ்(26). இவா் கடந்த 17.12.2019 ஆம் தேதி கண்ணணூா் அரியாற்றில் இருந்து டிராக்டரில் மணலை கடத்தி சென்றாா். அப்போது, கண்ணணூா் பிரிவு சாலை அருகே வாகன தணிக்கை செய்துக் கொண்டிருந்த போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்த முற்பட்டனா். ஆனால், துரைராஜ் டிராக்டரை நிறுத்தாமல் அதிகாரிகள் மீது ஏற்றி கொலை செய்துவிடும் நோக்கில் வாகனத்தை இயக்கியுள்ளாா்.

இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து துரைராஜை கைது செய்து சிறையிலடைத்தனா். இதுபோன்ற சம்பவங்களில் துரைராஜ் தொடா்ந்து ஈடுபட்டு வருவதால் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவிட்டாா். அதன்படி சிறையில் உள்ள துரைராஜூக்கு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com