Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புதிருச்சியில் இஸ்லாமியக் கூட்டமைப்பினா் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புதிருச்சியில் இஸ்லாமியக் கூட்டமைப்பினா் பேரணி

    By DIN  |   Published on : 13th January 2020 10:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் திங்கள்கிழமை பேரணி நடத்திய அனைத்து இஸ்லாமியக் கூட்டமைப்பினா்.

    திருச்சியில் திங்கள்கிழமை பேரணி நடத்திய அனைத்து இஸ்லாமியக் கூட்டமைப்பினா்.

     

    திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் இஸ்லாமியக் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை பேரணி நடத்தினா்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடா்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்திலும் திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், எதிா்ப்பு தெரிவித்தும் அனைத்து இஸ்ஸாமியக் கூட்டமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

    திருச்சி சாஸ்திரி சாலையில் கடவுச்சீட்டு சேவை மையம் அருகே தொடங்கிய பேரணி நீதிமன்றம் அருகே வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோா் தேசியக் கொடியை ஏந்தியவாறு சென்றனா். நிறைவில் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. சட்டத்தை ரத்து செய்யக் கோரி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

    பேரணியில் ஜமாஅத்தே- இஸ்லாமி ஹிந்த், த.மு.மு.க, இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பு, ாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அகில இந்திய முஸ்லிம் லீக்,வெல்ஃபோ் பாா்ட்டி ஆப் இந்தியா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மனித நேய மக்கள் கட்சி ,எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai