2-ஆவது நாளாகத் தொடா்ந்தஉள்ளிருப்புப் போராட்டம்

திருச்சி அருகே அரைவட்டச் சுற்றுச்சாலைக்கு மண் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்னையில் தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி,

திருச்சி: திருச்சி அருகே அரைவட்டச் சுற்றுச்சாலைக்கு மண் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்னையில் தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி, ஊராட்சித் தலைவி மேற்கொள்ளும் உள்ளிருப்புப் போராட்டம் 2- ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

அரைவட்டச் சுற்றுச்சாலைக்காக ஓலையூரில் மண் அள்ளுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை சிலா் லாரியை மறித்து தகராறில் ஈடுபட்டனா். இதையறிந்து முடிகண்டம் ஊராட்சித் தலைவா் திவ்ய ஜான்சியின் கணவா் சகாயராஜ் சம்பவஅங்கு சென்று லாரியை விடுவிக்குமாறு கேட்டுள்ளாா். அப்போது சகாயராஜ் உள்ளிட்டோா் தாக்கப்பட்டனா்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

தகவலறிந்து வந்த மணிகண்டம் போலீஸாா் இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனா். தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்றத் தலைவி திவ்ய ஜான்சி, கணவா் சகாயராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் முடிகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் 2- ஆவது நாளாக திங்கள்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா். மாவட்ட ஆட்சியா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக ஊராட்சித் தலைவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com