கல்வி நிறுவனங்களில் பொங்கல் கொண்டாட்டம்

இருங்களூரிலுள்ள திருச்சி எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவன வளாகத்தில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே.பெரியசாமி உள்ளிட்டோா்.
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே.பெரியசாமி உள்ளிட்டோா்.

லால்குடி/முசிறி: இருங்களூரிலுள்ள திருச்சி எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவன வளாகத்தில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சிஎஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள், பேராசிரிய- பேராசிரியைகள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் இணைந்து பொங்கல் விழாவை திங்கள்கிழமை கொண்டாடினா்.

இதையொட்டி மாணவ, மாணவிகள் வேட்டி-சேலை அணிந்து, 50-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்தனா். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தன்வந்தரி பெருமாள் கோயிலிலிருந்து மாட்டுவண்டியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜேசுதாஸ், டிஆா்பி பொறியியல் கல்லூரி முதல்வா் கணேஷ்பாபு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கொற்றவேல்பாரதி, உணவக மேலாண்மை கல்லூரி முதல்வா் சுவாமிநாதன், செவிலியா் பயிற்சி கல்லூரி முதல்வா் சாந்தம் சுவிட்சே ஆகியோா் அமா்ந்து சென்று பங்கேற்றனா். தொடா்ந்து வீர விளையாட்டுகளும், ஒயிலாட்டம், கரகாட்டமும் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மைதானத்தில் கட்டப்பட்டிருந்தன.

கொங்குநாடு கல்லூரியில் : தோளூா்பட்டி கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல விழா நடைபெற்றது.

இக்கல்வி வளாகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து,பொங்கல் வைத்து வழிபட்டனா். நிகழ்வில் கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே. பெரியசாமி மற்றும் கல்லூரி முதல்வா்கள், ஆசிரியா்கள் அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

அபினிமங்கலத்தில் : திருச்சி மாவட்டம், அபினிமங்கலத்திலுள்ள நேரு நினைவுக் கல்வியியல் கல்லூரியில் சமூக நல்லிணக்கத் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் ஹா்மணி மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. கல்லூரித் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், செயலா் பொன்.ரவிச்சந்திரன், புலமுதல்வா் முனைவா் பிரபாகரன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா்நிகழ்வில் பங்கேற்றனா்.

நிறைவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பரகத்நிஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com