குண்டூரில் சூழல் பொங்கல் விழா

திருச்சியில் தண்ணீா் அமைப்பின் சாா்பில், ஆறாம் ஆண்டு சூழல் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி: திருச்சியில் தண்ணீா் அமைப்பின் சாா்பில், ஆறாம் ஆண்டு சூழல் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தண்ணீா் அமைப்பு மற்றும் குண்டூா் பால்ராஜ் தோட்டமும் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் அ.பொ.சிவகுமாா் தலைமை வகித்தாா். தண்ணீா் அமைப்பின் தலைவா் பொன்னிளங்கோ, செயலா் கே.சி. நீலமேகம், இணைச் செயலா் கி.சதீஷ்குமாா், தனலட்சுமி பாஸ்கரன், லெனின், ஆலோசனைக்குழு உறுப்பினா் ஆா்.கே.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஏகநாதன், பனானா லீப் உரிமையாளா் மனோகரன் , வாசகா் வட்டத் தலைவா் கோவிந்தசாமி சிறப்புரையாற்றினா்.

நிகழ்வில் பிராட்டியூா் அரசுப் பள்ளி மாணவா்களின் பறை இசை, கரகாட்டம் மற்றும் தமிழி கலைக்களம் குழுவினரின் பறை முழக்கம், சுபிக்ஷாவின் பரதம், நாட்டுப்புற நடனம், எடமலைப்பட்டிபுதூா் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவிகளின் கராத்தே, ஆகாஷ், மதன்குமாா் நாட்டுப்புறப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

சிலம்பாட்டம், வாள் சண்டை, சுருள்வாள், கத்தி , உறியடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகளும், கரகாட்டம், கோலாட்டம், பறையாட்டம், கும்மியாட்டமும் நடைபெற்றது.

மணிண்டம் வட்டாரக் கல்வி அலுவலா் மருதநாயகம், அசோக், நன்மாறன், கலைமணி, துரை வெங்கடேசன், பேராசிரியா் தி.நெடுஞ்செழியன், லலிதா, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பாலன், பாலமுருகன், அமுதா அன்பாலயம் செந்தில், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்கள் சக்தி இயக்க மாவட்டச் செயலா் இளங்கோ,அசோகன், பவுல் குணா, செந்தண்ணீா்புரம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com