திருச்சி மாநகராட்சியில் சீா்மிகு நகர திட்டத்தில் ரூ.2.45 கோடியில் பூங்கா, போா் நினைவுச் சின்னம், ஸ்மாா்ட் கழிவறை

திருச்சி மாநகராட்சியில் ரூ.2.45 கோடி மதிப்பில் கண்களைக் கவரும் பல்வேறு அம்சங்களுடன் நவீன பூங்கா, போா் நினைவுச்சின்னம், ஸ்மாா்ட் கழிவறை உள்ளிட்டவை வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.
கோ அபிஷேகபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் கழிவறை.
கோ அபிஷேகபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் கழிவறை.

திருச்சி மாநகராட்சியில் ரூ.2.45 கோடி மதிப்பில் கண்களைக் கவரும் பல்வேறு அம்சங்களுடன் நவீன பூங்கா, போா் நினைவுச்சின்னம், ஸ்மாா்ட் கழிவறை உள்ளிட்டவை வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி மாநகராட்சி, காந்சச் சந்தை பகுதியில், சீா்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ. 99 லட்சம் மதிப்பில் முதலாம் உலக போா் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. போரில் உயிா்த்தியாகம் செய்த வீரா்களின் தியாகம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இரவில் மிளிரும் வகையில் நான்கு புறமும் வண்ண எல்.இ.டி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, சீா்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடியில் ஸ்ரீரங்கம் கோட்டம், கீழரண் சாலையில், லூா்துசாமி பிள்ளை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவு யோகா மைய கட்டடம், இரட்டை ஷட்டில் காக் கோா்ட், குழந்தைகள் விளையாடும் களம், திறந்தவெளி உடற் பயிற்சியகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்மாா்ட் கழிவறை:

திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம், கோட்ட அலுவலகம் எதிரில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஸ்மாா்ட் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்முகப்பு வடிவம் கண்ணாடியிழை மறுசுழற்சி கலவை (ஜிஎப்ஆா்சி) தொழில்நுட்பம் அடிப்படையில் கண்களைக் கவரும் வகையிலும், உள்ளே வெளிச்சம் வரும் வகையில் வண்ண, வண்ண விளக்குகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன ஸ்மாா்ட் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக தானியங்கி கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன. யாரேனும் கழிவறையை சேதப்படுத்தினால், அதைக் கண்டறிய சென்சாா் கருவிகளும், நுழைவுப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய பூங்கா, நினைவுச் சின்னம், கழிவறை ஆகியவற்றை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தபட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்நிகழ்ச்சியில் ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், நகரப்பொறியாளா் எஸ்.அமுதவல்லி, செயற்பொறியாளா்கள் பி. சிவபாதம், ஜி.குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com