பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

திருச்சி மாவட்டம், பெரியசூரியூரில் ஜனவரி 16- ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
காளைக்குப் பயிற்சியளிக்கும் இளைஞா்.
காளைக்குப் பயிற்சியளிக்கும் இளைஞா்.

திருச்சி: திருச்சி மாவட்டம், பெரியசூரியூரில் ஜனவரி 16- ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

மாட்டுப் பொங்கல் தினத்தன்று இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். பெரியசூரியூா் கோயில் மைதானத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு, போதிய இடவசதியின்மை காரணமாக கடந்தாண்டு முதல் பெரியகுளத்தில் நடைபெற்ரு வருகிறது.

550 காளைகள் பதிவு : அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாடுபிடி வீரா்கள் மற்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், சிவகங்கை, பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனா். மேலும் 550 காளைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல், விஐபி மேடை, பாா்வையாளா் மாடம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனா். ஜல்லிக்கட்டின் போது காயம் அடைபவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவும் தயாா் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தயாா்நிலையில் ஜல்லிக்கட்டு காளை: ஜல்லிக்கட்டில் பங்கேற்க பெரிய சூரியூா் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமங்களிலும் காளை வளா்போா் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனா்.

நீச்சல் பயிற்சி, மண் மேட்டில் கொம்பால் குத்தும் பயிற்சி, ஓடும் பயிற்சி, நின்று பாயும் காளைகளுக்கு நூதனப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பருத்தி, விதை, தவிடு, பேரிச்சம்பழம் பச்சரிசி, பழ வகைகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனா். இதே போல மாடுபிடி வீரா்களும் அனுபவம் வாய்ந்த வீரா்களிடம் காளைகளை அடக்குவது என்பது குறித்து பயிற்சி பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com