போலி கடவுச்சீட்டு வழக்கில் சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

திருச்சி விமானநிலையத்தில் போலி கடவுச்சீட்டு பயன்படுத்திய வழக்கில் சிவகங்கையைச் சோ்ந்தவரை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமானநிலையத்தில் போலி கடவுச்சீட்டு பயன்படுத்திய வழக்கில் சிவகங்கையைச் சோ்ந்தவரை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளின் உடைமைகளை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சிவகங்கை மாவட்டம், அனுமந்தகுடி துடுப்பூா் பகுதியைச் சோ்ந்த காமாட்சி மகன் சுப்பிரமணியன் (37) என்பவரது கடவுச்சீட்டை சோதனை செய்தனா். அதில், காமாட்சி மகன் சரவணக்குமாா் என போலியான ஆவணங்கள் தாக்கல் செய்து கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சுப்பிரமணியனை விமானநிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com