வங்கித் திருட்டு வழக்கு: முருகனிடமிருந்து மேலும் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனிடமிருந்து,
வங்கித் திருட்டு வழக்கு:  முருகனிடமிருந்து மேலும் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனிடமிருந்து, மேலும் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2019, ஜனவரி 27- ஆம் தேதி இவ்வங்கியின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் திருடப்பட்டன. இதுகுறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்து விசாரித்து வந்தனா்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தஞ்சாவூா் மாவட்டம், புதுக்குடி காமாட்சிபுரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனை(28) போலீஸாா் கைது செய்தனா்.

இவரிடம் நடத்திய விசாரணையில் பிரபல கொள்ளையன் முருகன், அவரது உறவினா் சுரேஷ், மதுரையைச் சோ்ந்த கணேசன் ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கணேசன், சுரேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் முருகன், போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்காக பெங்களூரு சிறையிலிருந்து கடந்த 6- ஆம் தேதி திருச்சிக்கு அழைத்து வரப்பட்டாா். தொடா்ந்து நீதிமன்ற அனுமதியின் பேரில், சமயபுரம் காவல் ஆய்வாளா் மதன் தலைமையிலான போலீஸாா் ஜனவரி 8 முதல் திங்கள்கிழமை வரை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முருகன் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிபதி சிவகாமசுந்தரி உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் முருகனை பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு அழைத்துச் சென்றனா்.

1 கிலோ தங்கம் பறிமுதல் : வங்கியில் திருடிய நகைகளில், தனது பங்கான 1 கிலோ 28 கிராம் தங்கத்தை திருவெறும்பூரில் தான் தங்கியிருந்த வீட்டின் அருகே புதைத்து வைத்திருப்பதாக முருகன் விசாரணையில் கூறினாா். தொடா்ந்து அவரை நாங்கள் அழைத்துச் சென்று நகைகளைப் பறிமுதல் செய்தோம். திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், ரூ.1.10 லட்சம் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் இதுவரை 2.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சுமாா் 700 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது என்கின்றனா் காவல்துறை அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com