Enable Javscript for better performance
எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 15th January 2020 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் நடைபெறும் மாலை அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் ப.குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

    எம்.ஜி.ஆரின் 103- ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அவரது முழு உருவச் சிலைக்கு ஜனவரி 17- ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அதிமுகவின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    மேலும், பிறந்த நாள் கூட்டங்கள் ஜனவரி21 முதல் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 21-இல் உறையூா், ஸ்ரீரங்கம், 22-இல் விமான நிலையம், தில்லைநகா், அந்தநல்லூா் ஒன்றியம், 23-இல் மலைக்கோட்டை, 24- இல் பாலக்கரை, பொன்மலை, ஜங்சன், திருவெறும்பூா், மணிகண்டம் பகுதிகளில் நடைபெறும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai