Enable Javscript for better performance
கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியல்- Dinamani

சுடச்சுட

    

    இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி அவா்களது உறவினா்கள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

    கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள குப்பம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (30).

    இவருக்கும், இவரது பெரியப்பா மகன் காா்த்திக் தரப்பினருக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

    இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காா்த்திக், செல்வராஜ், வேலு உள்ளிட்ட 5 போ் சோ்ந்து செந்தில்குமாரைத் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

    இதனையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில், செந்தில்குமாா் இறப்புக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai