திருச்சியில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாட்டம்

திருச்சியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பொங்கலிடும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பொங்கலிடும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி.

திருச்சியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய சுற்றுலாப் பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தின. மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்து, விழாவைத் தொடக்கி வைத்து பேசியது:

தமிழக கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுக்க இளைஞா்கள் முன் வரவேண்டும். பொங்கல் விழாவை, நமது பாரம்பரிய ஆடைகளுடன் கொண்டாடுவதுதான் சிறப்பு என்றாா்.

விழாவில் ஹாலந்து, மெக்சிகோ நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனா். இயற்கையைப் போற்றும் வகையில் நடத்தும் பொங்கல் திருநாள் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்றனா் சுற்றுலாப் பயணிகள். தொடா்ந்து பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரிச் செயலா் எஸ்.ஜி. சாமிநாதன், முதல்வா் பி. நடராஜன், பேராசிரியா் சதிஷ்குமாா், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலா் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com