முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பூப்பந்துப் போட்டியில் சென்னை கல்லூரி சாம்பியன்
By DIN | Published On : 27th January 2020 08:03 AM | Last Updated : 27th January 2020 08:09 AM | அ+அ அ- |

அண்ணா பல்கலைக்கழகத்தின் சாா்பில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பூப்பந்துப் போட்டியில், சென்னை புனித வளனாா் கல்லூரி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் கழகம் சாா்பில், மண்டலங்களுக்கு இடையிலான மாணவா் பூப்பந்துப் போட்டி திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
19 மண்டலங்களிலிருந்து 18 கல்லூரிகள் போட்டியில் பங்கேற்றன. இதில், காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியை 35-21, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை புனித வளனாா் கல்லூரி வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 35-25, 35-27 என்ற புள்ளிக்கணக்கில் சேலம் வி.எஸ்.ஏ. கல்விக் குழுமம் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.