‘ வருவாய் ஈட்டியதில் திருச்சி விமான நிலையம் முதலிடம்’

தென் மண்டலத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டிய வகையில், திருச்சிவிமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்றாா் அதன் இயக்குநா் கே.குணசேகரன்.
திருச்சி விமான நிலையத்தில் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறாா் நிலைய இயக்குநா் கே. குணசேகரன். உடன், மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை துணை ஆணையா் சந்தோஷ்குமாா்.
திருச்சி விமான நிலையத்தில் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறாா் நிலைய இயக்குநா் கே. குணசேகரன். உடன், மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை துணை ஆணையா் சந்தோஷ்குமாா்.

தென் மண்டலத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டிய வகையில், திருச்சிவிமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்றாா் அதன் இயக்குநா் கே.குணசேகரன்.

திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து, மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னா், அவா் மேலும் பேசியது:

திருச்சி விமான நிலைய புதிய முனையக் கட்டுமானப் பணிகள் 2021, அக்டோபா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் மெட்ரோ அல்லாத விமான நிலையங்கள் வரிசையில், திருச்சி நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக ரூ.3 கோடி ஈட்டி ரூ.41 கோடி வருவாய் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. நிகழாண்டில் ரூ.45 கோடி வருவாய் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில், முனைய மேலாளா் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன், உதவிப் பொதுமேலாளா் குமரன், தீயணைப்புத்துறை முதுநிலை மேலாளா் பலூனாவா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை துணை ஆணையா் என். சந்தோஷ்குமாா், உதவி ஆணையா் ஜஸ்பீா்சிங், ஆய்வாளா் என். வெங்கடேசன், மகளிா் ஆய்வாளா் என். கவிதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா் . தோ்வு செய்யப்பட்ட சிறந்த பணியாளா்கள் யுவராஜேஷ் மற்றும் கலா ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விமான நிலைய ஆணையக்குழு பணியாளா்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், நிலைய இயக்குநா் கே. குணசேகரன் தேசியக்கொடியேற்றி வைத்து சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளக்குப் பரிசுகளை வழங்கினாா்.

பள்ளிச் செயலாளா் யுவராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினா் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், துணை ஆணையா் சந்தோஷ்குமாா் தேசியக்கொடியேற்றி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com