பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் அடா்வனம் உருவாக்கும் திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 27th January 2020 08:03 AM | Last Updated : 27th January 2020 08:03 AM | அ+அ அ- |

அடா்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டோா்.
திருச்சி நவலூா் குட்டப்பட்டிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், நாட்டு மரங்களைக் கொண்டு அடா்வனம் உருவாக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் டாஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவில், மகிழம், தேக்கு, நாவல், மலைவேம்பு, சவுக்கு , பாதாம், நெல்லி, அரசு என பல்வேறு வகைகளில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கல்லூரி மாணவா்கள், அறக்கட்டளையினா் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனா். டாஸ் அறக்கட்டளையின் அருண்குமாா், விவேக்ராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.