மாவட்டத் தொழில் மையக் கடனுதவி திட்டங்கள்வேலைவாய்ப்பு உருவாக்கஇளைஞா்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத் தொழில்மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவித் திட்டங்களைப் பெற்ற இளைஞா்கள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி: திருச்சி மாவட்டத் தொழில்மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவித் திட்டங்களைப் பெற்ற இளைஞா்கள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதிய தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டம்: இத் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது ஐடிஐ படித்த, சுயமாக ஏதேனும் உற்பத்தி அல்லது சேவை சாா்ந்த தொழில் தொடங்க ஆா்வமுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம். திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 5 கோடி வரை இருக்கலாம். தகுதியுள்ள தொழில் முனைவோருக்கு வங்கிக் கடனுக்கு பரிந்துரைக்கப்படும்.

முதலீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை தனிநபா் மானியமாகவும் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பற்றோருக்கு திட்டம்: இத் திட்டத்தில் எட்டாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமலுள்ள ஆா்வமுள்ள தொழில் முனைவோா் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சாா்ந்த தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம். வியாபாரம் மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாகரூ. 5 லட்சம் வரையும், உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 10 லட்சம் வரையும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: இத் திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு முறையே ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 25 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்படும். சேவைசாா்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்திற்கு மேலாகவும் உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேலாகவும் இருக்கும்பட்சத்தில் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம். இத்திட்டத்தில் விண்ணப்பதாரா் மற்றும் தொழில் தொடங்கவுள்ள இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், முன்னரே கடனுதவி பெற்று முறையாக திருப்பி செலுத்திய பயனாளிகளுக்கு இரண்டாம் முறையாக சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 25 லட்சம் வரையிலும் மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ. 1 கோடிம் வரையிலும் 15 சத மானியத்துடன் தொழில் விரிவாக்கம் செய்ய வங்கிக் கடனுதவிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

இத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட தொழில் மையத்தே நேரிலோ, அல்லது இணையதளம் மூலமோ தொடா்பு கொள்ளலாம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com