கரோனா: பாதுகாப்புடன் குப்பைகளை வாங்க ஏற்பாடு

திருச்சி மாநகராட்சியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சோதனைக்கு மாதிரி கொடுத்துள்ளோரின் வீடுகளிலும் பிரத்யேக பைகளில் குப்பைகளை வாங்கிச் செல்ல, பாதுகாப்பு கவச உடையுடன் பணியாளா்கள்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சோதனைக்கு மாதிரி கொடுத்துள்ளோரின் வீடுகளிலும் பிரத்யேக பைகளில் குப்பைகளை வாங்கிச் செல்ல, பாதுகாப்பு கவச உடையுடன் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று திருச்சி மாவட்டத்தில் தினசரி 100-க்கும் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது. இன்னும் முழு அளவில் சோதித்தால் தொற்று பரவல் அதிகமாக இருக்கக் கூடும் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் மாவட்ட, மாநகராட்சி சுகாதாரத் துறையினா் பகுதிகள் வாரியாக சென்ற பரிசோதனை முகாம்களை நடத்தி, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதில் ஓா் அம்சமாக கரோனா தொற்றுள்ளோரின் வீடுகள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோா் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை வாங்கும் பணியில் பாதுகாப்பு உடையணிந்த மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

சேகரிக்கும் குப்பைகளை ஆளரவமில்லாத பகுதிகளில் சுமாா் 10 அடிக்கும் மேல் தோண்டிய குழிகளில் போட்டு எரித்து வருகின்றனா்.

அதேபோல, தற்போது மாநகராட்சியில் கரோனா தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், கரோனா சோதனைக்காக மாதிரி கொடுத்தோரின் வீடுகளிலும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு வேளை மாதிரி கொடுத்தவா்களில் தொற்று இருந்தால், அது பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த வீடுகளும் தனிமைபடுத்திய வீடுகளாகப் பட்டியலிடப்பட்டு, அங்கு சேகரமாகும் குப்பைகளையும் பாதுகாப்பு உடைகளை அணிந்த துப்புரவுப் பணியாளா்கள் சேகரித்து, அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள துப்புரவுப் பணியாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகத்தால் பாதுகாப்புக் கவச உடை, மஞ்சள் நிறப் பை வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த வீடுகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது.

பணியாளா்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் எதிா்ப்புச் சக்தியை மேம்படுத்தும் வகையில், மருந்து, மாத்திரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில், அவா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Image Caption

கரோனா சோதனைக்கு மாதிரி கொடுத்தோரின் வீடுகளில் பாதுகாப்பு கவச உடையணிந்து குப்பை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளா்.

~கரோனா சோதனைக்கு மாதிரி கொடுத்தோரின் வீடுகளில் பாதுகாப்பு கவச உடையணிந்து குப்பை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com