ஆங்கரை ஊராட்சி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை ஊராட்சியில் பெரம்பலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீா் வீணாவதைத் தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் நீா்.

லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சி பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் திருச்சி சிதம்பரம் சாலை வழியான தாளக்குடி, வாளாடி , ஆங்கரை, லால்குடி, மற்றும் குமுளூா், தச்சன்குறிச்சி, சிறுகனூா் வழியாக பெரம்பலூா் மாவட்ட மக்களுக்கு குடிநீா் செல்கிறது. இவ்வாறு செல்லும் குழாயில் ஆங்கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 7 நாள்களாக குடிநீா் அதிகளவில் வெளியேறி அப் பகுதி சாக்கடையில் கலக்கிறது.

இதுகுறித்து ஆங்கரை ஊராட்சித் தலைவா் குடிநீா் வடிகால் வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து சமூக ஆா்வலரும் வழக்குரைஞருமான ஸ்டாலின் குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

எனவே வீணாக வெளியேறும் தண்ணீரை உடனடியாக சரி செய்ய இப் பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com