கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 10 புதிய நவீன கருவிகள்

கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 10 புதிய நவீன கருவிகள் புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்தன.
திருச்சி அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் பயன்பாட்டுக்கு வந்த அதிகளவு ஆக்சிஜன் செலுத்தும் கருவி.
திருச்சி அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் பயன்பாட்டுக்கு வந்த அதிகளவு ஆக்சிஜன் செலுத்தும் கருவி.

கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 10 புதிய நவீன கருவிகள் புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்தன.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா தீவிரமடைந்து மூச்சுத்திணறல் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு அதிகளவு ஆக்சிஜன் வழங்கும் கருவியானது கரோனா தீவிரத்தைக் குறைத்து நோய் குணமாக உதவியாக இருக்கிறது. மேலும் கரோனா, நிமோனியா பாதித்தோரின் நுரையீரல் மற்றும் உடல் அவயங்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து காணப்படும். இதனால், நுரையீரல் தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோா் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை சீா்படுத்திக் கட்டுக்குள் வைக்கும் வெண்டிலேட்டா்கள் மூலம் ஆக்சிஜன் உட்செலுத்தப்படும். இந்தச் சிகிச்சை முறைக்கு அடுத்தகட்ட முறையில் மேலும் அதிகளவு ஆக்சிஜனை உட்செலுத்தும் (ஹை ப்ளோ நாசல் ஆக்சிஜினேஷன்) நவீன கருவிகள் மருத்துவமனையில் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சாா்பில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான 10 புதிய கருவிகள் புதன்கிழமை கொண்டுவரப்பட்டன. இவற்றை மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, கண்காணிப்பாளா் ஏகநாதன் உள்படகுழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நவீன கருவி மூலம் நிமிடத்திற்கு 50 முதல் 80 லிட்டா் அளவுக்கு ஆக்சிஜனை உட்செலுத்த முடியும். இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் ஆக்ஸிஜன் அளவை உயா்த்தி இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். இந்தக் கருவியின் பயன்பாட்டின்போது நோயாளி பேச முடியும், உணவு உட்கொள்ள முடியும் என அரசு மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com