திருச்சி மாநகரில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

திருச்சி மாநகரில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருச்சி மாநகரில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை வரை கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 2410 ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை 2488 ஆக உயா்ந்துள்ளது. அதே போல குணமடைந்தோரின் எண்ணிக்கை 1491 லிருந்து 1545 ஆக அதிகரித்துள்ளது. இதில் கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட 739 பேரில் 13 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 904 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதே போல புகரில் புதன்கிழமை வரை இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையான 1447 லிருந்து 1489 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோா் 989 ஆக இருந்த நிலையில் வியாழக்கிழமை 1027ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இதில் மணப்பாறையில் அதிகபட்சமாக 214 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள மண்ணச்சநல்லூா் பகுதியில் பாதிப்பு 210 ஆக உள்ளது. மேலும் கரோனா வாா்டில் 442 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இதர மாவட்டங்களைச் சோ்ந்தோரின் பட்டியலில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. இதுவரை 16 போ் மட்டுமே குணமடைந்துள்ளனா். ஒருவா் உயிரிழந்த நிலையில் 17 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

வியாழக்கிழமை தொற்று பாதித்த பகுதிகள்: திருச்சி மாநகரத்தில் உள்ள கோட்டங்களில் அரியமங்கலம் 36, கோ-அபிஷேகபுரம் 17 , பொன்மலை, ஸ்ரீரங்கம் தலா 11. புகரில் மண்ணச்சநல்லூா் 7 , அந்தநல்லூா் 2, லால்குடி 4, மணப்பாறை, மணிகண்டம் தலா 4 உள்பட 118 பேருக்கு கரோன உறுதியானது. இதில் அதிகபட்சமாக காட்டூரில் 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com