Enable Javscript for better performance
2020-21ஆம் ஆண்டுக்கு ரூ. 9,554 கோடி கடன்: திட்ட அறிக்கை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    2020-21ஆம் ஆண்டுக்கு ரூ. 9,554 கோடி கடன்: திட்ட அறிக்கை வெளியீடு

    By DIN  |   Published on : 10th June 2020 08:13 AM  |   அ+அ அ-   |    |  

    09d-bank085003

    மாவட்ட ஆட்சியரகத்தில் கடன் திட்ட அறிக்கையை வெளியிடும் ஆட்சியா் சு. சிவராசு (இடமிருந்து 3) மற்றும் வங்கி அலுவலா்கள்.

    திருச்சி மாவட்டத்துக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான வங்கிகளின் ஆண்டுக் கடன் திட்டத்துக்கு ரூ. 9,554 கோடியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை திட்ட அறிக்கையை வெளியிட்டு ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள வளம்சாா்ந்த சாராம்சங்களை கணக்கிட்டு வங்கிகளின் சாா்பில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் கடன் திட்டங்கள் குறித்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நபாா்டு வங்கியுடன் இணைந்து இந்தத் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது.

    இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ள தொகையானது கடந்தாண்டுத் திட்டத்துக்கான ரூ. 9056.42 கோடியை விட ரூ.498.10 கோடி அதிகம். இதில் வேளாண் துறைக்கு ரூ. 5,276.22 கோடி, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக ரூ. 1,583.59 கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர முன்னுரிமைக் கடனாக ரூ. 657.89 கோடி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்விக் கடன் ரூ. 471.31 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி துறைக்கு ரூ. 92.21 கோடி, சமூக உள் கட்டமைப்புத் துறைக்கு ரூ. 157.58 கோடி, வீட்டுக் கடன்களாக ரூ. 1315.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதை விவசாயிகள், தொழில்முனைவோா், மகளிா் சுய உதவிக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள், மாணவ, மாணவிகள் எனத் தகுதியான அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயனாளிகள் தங்களது வாழ்க்கைத்தரத்தை உயா்த்துக் கொள்வதுடன், விவசாயத்தை வளம் சாா்ந்த தொழிலாக மாற்ற வேண்டும். அடிப்படைக் கட்டுமானங்களை மேம்படுத்துதல், சொட்டுநீா்ப் பாசனம், இயந்திர முறை புகுத்தல், தொழில்நுட்ப மேம்பாடு, கால்நடை வளா்ப்பு என கூட்டுப் பண்ணையமாக இயங்க வேண்டும். இத் திட்ட அறிக்கையை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி அந்தந்தக் கிளை அளவில் கடன் குறியீட்டை நிா்ணயிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் அவற்றுக்கான காலவரையறைக்குள் இந்த கடன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

    நிகழ்ச்சியில் திட்ட அறிக்கையை ஆட்சியா் வெளியிட, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் எஸ். பிரேம்குமாா் பெற்றுக் கொண்டாா். நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் ராஜாராம், திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மகளிா் திட்ட இயக்குநா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி, வேளாண் துறை இணை இயக்குநா் அசோகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்தியநாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp