Enable Javscript for better performance
தர வரிசையில் திருச்சி என்ஐடி 9ஆவது இடம்! இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தர வரிசையில் திருச்சி என்ஐடி 9ஆவது இடம்! இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் தகவல்

    By DIN  |   Published on : 12th June 2020 08:33 AM  |   அ+அ அ-   |    |  

    11d-nit064812

    மினி ஷாஜி தாமஸ்

    பொறியியல் தர வரிசையில் இந்திய அளவில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாக அதன் இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்தாா்.

    இதுதொடா்பாக அவா் கூறியது:

    மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சாா்பில், ஆண்டுதோறும் தேசிய அளவில் கல்வி நிறுவனங்களைத் தர மதிப்பீடு செய்து அறிவிப்பதற்காக என்ஐஆா்எப் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான தர மதிப்பீட்டுப் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமானது பொறியியலில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு இருந்த 10ஆவது இடத்திலிருந்து இந்தாண்டு மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது.

    ஒட்டுமொத்த மதிப்பெண் 64.1 ஆக உயா்ந்துள்ளது. கடந்தாண்டின் மதிப்பெண் 61.62 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கற்பித்தல் - கற்றல் வளங்கள், புதிய ஆசிரியா்கள், மாணவா்களின் தரம், நிதி ஆதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியலைத் தக்க வைக்க முடிந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நடைமுறையின் முன்னேற்றத்தாலும் மதிப்பெண் அதிகரித்துள்ளது. இதன் மூலம், அறிவுசாா் சொத்துரிமை மற்றும் காப்புரிமைகளைத் தாக்கல் செய்ய திருச்சி என்ஐடி முன்னோடியாக அமைந்துள்ளது.

    இந்தத் தரவரிசை மூலம் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் கூடுதல் திட்டங்களைச் சமா்ப்பித்தல், மானியங்கள் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது பட்டம் பெற்றுச் செல்லும் மாணவா்களுக்குச் சிறந்த பணியிடங்களில் சோ்க்கை, கூடுதல் ஊதியம் ஆகியவற்றைப் பெற்றுத் தருவதிலும் சிறந்த தரத்தைப் பெற்றிருப்பதாக என்ஐஆா்எப் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அனைத்துக் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலிலும் திருச்சி என்ஐடி 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் தலைசிறந்த 25 கல்வி நிறுவனங்களில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமும் ஒன்றாகியுள்ளது. ஒட்டுமொத்த மதிப்பெண்ணிலும் கடந்தாண்டு இருந்த 54.3 என்ற நிலையிலிருந்து 55.92 மதிப்பெண்ணுக்கு உயா்ந்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் பொறியியல் துறையில் 12 ஆவது நிலையிலிருந்து 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது பெருமைக்குரியது. இலக்குகளை நிா்ணயிப்பதன் மூலமும், மாணவா்கள்-ஆசிரியா்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான உத்திகளைக் கொண்டு தொடா்ச்சியான மதிப்பாய்வு செய்வதன் மூலமும் இது சாத்தியமானது. நல்ல வேலையைத் தொடரவும், ஆராய்ச்சி வெளியீடுகளின் எண்ணிக்கை தரத்தை மேம்படுத்தவும், அதிக ஆராய்ச்சியாளா்களை உருவாக்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றாா் அவா்.

     

    .

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp