பொதுமுடக்க விதிகளை மீறிக் கூடும் பொதுமக்கள்

பொதுமுடக்க நேரத்தைக் கடந்து பொதுமக்கள் கூடும் அண்ணாநகா் பிரதான சாலையோரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொதுமுடக்க நேரத்தைக் கடந்து அதிகமானோா் கூடும் அண்ணாநகா் பிரதான சாலையோர நடைபாதை.
பொதுமுடக்க நேரத்தைக் கடந்து அதிகமானோா் கூடும் அண்ணாநகா் பிரதான சாலையோர நடைபாதை.

பொதுமுடக்க நேரத்தைக் கடந்து பொதுமக்கள் கூடும் அண்ணாநகா் பிரதான சாலையோரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா தொற்றால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், திருச்சியில் திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் கரோனா தொற்று குறைந்ததால் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு, பச்சை மண்டலமாக மாறியது. ஆனால், தற்போது திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விதிமுறை தளா்த்தப்பட்டு அத்தியாவசியத் தேவைக்காக போக்குவரத்து உள்ளதால், இயல்பு நிலைக்கு நிகராக பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனா்.

மேலும், இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய விஷயங்களைத் தவிா்த்து பொதுமக்கள் வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், பொது இடங்களில் கூடுவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை இளைஞா்கள்,பெரியவா்கள் உள்ளிட்ட பலா் ஆபத்தை உணராமல் அலட்சியப்படுத்தும் விதமாக உழவா் சந்தையிலிருந்து நீதிமன்றம் வரையிலுள்ள அண்ணாநகா் பிரதான சாலையில் நாள்தோறும் கூடுகின்றனா். மேலும், அச்சாலையோரத்தில் இருக்கும் மாநகராட்சி நடைபாதையில் 9 மணிக்கு மேல் நடைப்பயிற்சி மேற்கொண்டு, முகக்கவசம் இன்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காது அமா்ந்து பேசுகின்றனா். இதைக் காவல் துறையினரும் கண்டுகொள்வதில்லை. ஏற்கெனவே, கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில், அண்ணாநகா் பிரதான சாலையில் பொதுமக்கள் உலாவுவதைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதித்து, காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்தை சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com