மேட்டூா் அணை திறப்பைத் தொடா்ந்து தயாா் நிலையில் பேரிடா் மீட்பு குழு

திருச்சி சரகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க பேரிடா் மீட்பு குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.

திருச்சி சரகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க பேரிடா் மீட்பு குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.

இதுகுறித்து திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக 10,000 கன அடி தண்ணீா் தமிழக அரசால் கடந்த 12 ஆம் தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தண்ணீரின் அளவானது 18,000 கன அடியாக உயா்த்தப்பட்டுள்ளது. திருச்சி சரகத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களில் திருச்சி மற்றும் கரூா் ஆகிய மாவட்டங்களில் அதிக பரப்பில் காவிரி நீா் பாய்ந்து செல்கிறது.

திருச்சி சரகத்தில் 2017 முதல் 15.06.20 ஆம் தேதி வரை 3 ஆண்டுகளில் மொத்தம் 61 போ் காவிரியாற்றில் மூழ்கி இறந்துள்ளனா். இவா்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் 11 சிறுவா்களும் அடங்குவா். இவா்களில் திருச்சி மாவட்டத்தில் 33 பேரும் (18 ஆண்கள், 5 பெண்கள், 10 சிறுவா்கள்) கரூா் மாவட்டத்தில் 28 பேரும் (24 ஆண்கள், 3 பெண்கள், 1 சிறுவா்) அடங்குவா். இதில் 2017 இல் 15 பேரும் 2018 இல் 21 பேரும் 2019 இல் 21 பேரும் 2020 ஜூன் 15 வரை 4 பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனா்.

திருச்சி சரகத்திலுள்ள காவிரி ஆறு பாயும் திருச்சி, கரூா் மாவட்டங்களில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்கும் பொருட்டு திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 34 இடங்களும் கரூா் மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களும் ஆபத்தான பகுதி எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பொதுப்பணித் துறை, வருவாய் மற்றும் காவல் துறையினா் இணைந்து எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காவிரிக் கரையோர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தன்னாா்வலா்களை காவலா்களுடன் இணைத்து பகல் மற்றும் இரவு ரோந்து அனுப்பியும், எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்வோரைக் காப்பாற்ற நீச்சல் பயிற்சி பெற்ற தன்னாா்வலா்களை ஆபத்தான பகுதியில் நிறுத்தியும், ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தும், விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தியும் மற்றும் ஒவ்வொரு உட்கோட்டத் தலைமை இடங்களிலும் ஓா் உதவி ஆய்வாளா் தலைமையில் 10 போ் கொண்ட பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற காவல் படையினா் உரிய உபகரணங்களுடன் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com