ஊரக வேலை உறுதித் திட்டம்: வீடு தேடி கூலி வழங்க முடிவு

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு அவா்களது இருப்பிடம் தேடி கூலி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு அவா்களது இருப்பிடம் தேடி கூலி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுமுடக்கத்தால் கிராமப்புறப் பகுதிகளில் வங்கிக்குச் சென்று பணம் எடுக்க இயலாத நிலையில் உள்ளது. இந்நிலையில், வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு வங்கிகளில் வரவு வைக்கப்படும் கூலிப் பணத்தை எடுக்க சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குரிய தினக் கூலியை அவரவா் வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் நடைபெறும் ஊரக வேலைத் திட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு அவரவா் இருப்பிடம் தேடிச் சென்று கூலி வழங்கப்படும். தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையானது வாரந்தோறும் வியாழக்கிழமை வழங்கப்படும். வங்கி முகவா்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள பொது இடத்தில் அனைவருக்கும் கூலித் தொகை வழங்கப்படும். எனவே, தொழிலாளா்கள் தாங்கள் வசிக்கும் ஊராட்சியிலேயே வியாழக்கிழமை கூலி பெறலாம். அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com