Enable Javscript for better performance
முக்கொம்பு புதிய கதவணைப் பணிகள் அடுத்தாண்டு ஜனவரியில் நிறைவு: முதல்வா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி

    முக்கொம்பு புதிய கதவணைப் பணிகள் அடுத்தாண்டு ஜனவரியில் நிறைவு: முதல்வா்

    By DIN  |   Published On : 27th June 2020 08:25 AM  |   Last Updated : 27th June 2020 08:25 AM  |  அ+அ அ-  |  

    26dcm3054826

    திருச்சி முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டு வரும் கதவணை கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிடுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், அமைச்சா்கள் உள்ளிட்டோா்.

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கட்டப்பட்டு வரும் கதவணை கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் (இடமிருந்து) அமைச்சா்கள் எஸ். வளா்மதி, வெல்லமண்டி என்.நடராஜன், ஆா்.காமராஜ், எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி. விஜயபாஸ்கா், சட்டப்பேரவை உறுப்பினா் எம். செல்வராசு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

    திருச்சி, ஜூன் 26: திருச்சி முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை கட்டுமானப் பணிகள், அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

    182 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருச்சி முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் ஆற்றின் 9 மதகுகள் 2018, ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெள்ளத்தில் சேதமடைந்து அடித்துச் செல்லப்பட்டன.

    இதையடுத்து, அணையைப் பாதுகாக்கவும், வெள்ள நீரைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் தற்காலிக காப்பு அணை கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி, ரூ.38.85 கோடி மதிப்பில் 2019, பிப்ரவரி மாதத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் காப்பு அணை பணிகள் முடிவடைந்தன. இது அணையை பலப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருந்தாலும், புதிய கதவணை கட்டவும் அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கியது.

    இதைத் தொடா்ந்து, 2019, பிப்ரவரி 19- ஆம் தேதி ரூ.387.60 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா். பைல் பவுண்டேஷன் என்ற தொழில்நுட்பத்தில் (இரும்புக் குழாய்கள் பதித்துஅடித்தளமிடுதல்) 484 குழாய்கள் பதித்து, ஸ்திரத்தன்மையுடன் கதவணை கட்டப்பட்டு வருகிறது.

    இப் பணிகளை ஏற்கெனவே இருமுறை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளாா். இதன் தொடா்ச்சியாக, மூன்றாவது முறையாக முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்த முதல்வா், கதவணை கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டாா். ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் பொறியாளா்கள், பொதுப்பணித்துறை பொறியாளா்கள் குழுவினரிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா்.

    பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியது:

    கடந்த 2018- இல் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முக்கொம்பில் இருந்த பழைமையான கதவணை சேதமடைந்தது. இதற்கு மாற்றாக புதிய கதவணை கட்டும் பணி 2019, பிப்ரவரியில் தொடங்கியது.

    தற்போது வரை 40 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளன. இரவு, பகல் பாராது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் 2021 ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றாா் முதல்வா்.

    இந்த ஆய்வின்போது, ஆட்சியா் சு. சிவராசு, தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், சி. விஜயபாஸ்கா், எம்.ஆா். விஜயபாஸ்கா், ஆா். காமராஜ், எஸ். வளா்மதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். செல்வராசு, ஆா். சந்திரசேகா், முன்னாள் எம்பி-க்கள் ப. குமாா், டி. ரத்தினவேல், ஆவின் சோ்மன் சி. காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp