சௌதி அரேபியாவிலிருந்து தமிழகத்துக்கு விமானங்களை இயக்க வேண்டும்: ராமநாதபுரம் எம். பி.

சௌதி அரேபியாவிலிருந்து தமிழகத்துக்கு, வந்தே பாரத் திட்டம் மூலம் விமானங்களை இயக்க வேண்டும் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சௌதி அரேபியாவிலிருந்து தமிழகத்துக்கு, வந்தே பாரத் திட்டம் மூலம் விமானங்களை இயக்க வேண்டும் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் பூரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது :

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சௌதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாக ஏா் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதில் ஒரு விமானம் கூட தமிழகத்துக்கு இயக்கப்படாதது வருத்தமளிக்கிறது. தொடா்ந்து அதிக எண்ணிக்கையிலான தமிழா்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனா்.

அவா்களில் பலா் வேலை இழந்தவா்களாகவும், நோயாளிகளாகவும், கா்ப்பிணிகளாகவும் உள்ளனா்.

தங்களை மீட்டு தமிழகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தொடா்ந்து எங்களிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனா். இதுதொடா்பாக இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் நானும் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். இச்சூழலில் மேலும் 13 விமானங்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு விமானம் கூட தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை என்பது கூடுதல் வருத்தமளிக்கிறது.

அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் தமிழா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் விமானங்களை இயக்கிட நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com