முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி அருகே பிறந்து சில மணி நேரமே ஆனபெண் சிசு மீட்பு
By DIN | Published On : 03rd March 2020 05:38 AM | Last Updated : 03rd March 2020 05:38 AM | அ+அ அ- |

திருச்சி காட்டூரில் திங்கள்கிழமை மீட்கப்பட்ட பெண் சிசு.
திருச்சி அருகே தெருவோரத்தில் கிடந்த பெண் சிசு திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
திருவெறும்பூா் அடுத்துள்ள காட்டூா் பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வாசலில் திங்கள்கிழமை காலை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அப்பகுதியினா், திருவெறும்பூா் போலீஸாா், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் குழந்தையை மீட்டனா்.
பின்னா், காட்டூா் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு ‘சைல்டு லைன்’ மூலம் குழந்தையை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து, திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.